எமது நோக்கு
நவீன தொழில் நுட்பத்தினை வினைத்திறன்மிக்க மக்கள் சேவையை வழங்குவதுடன் சமூபொருளாார உட்கட்டுமான அபிவிருத்தியை ஏற்படுத்தல்எமது கொள்கை
அரச நல்லாட்சி கொள்கைகளுக்கு அமைவாக முன்னுரிமை அடிப்படையில் நியாய அதிக்கமட்டத்தில் சேவைபெறுநர்களின் நிலைத்து நிற்கக்கூடிய சமூக பொருளாதார அபிவிருத்தின் ஊடாக அவர்களின் கொள்வனவு சக்கியை உயர்வடையச்செய்து தன்னிறைவான வாழ்கைத்தரத்தினை உறுதிப்படுத்தல்.மாவட்டத்தின் அமைவும் எல்லைகளும்மாவட்டத்தின் அமைவும் எல்லைகளும்இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவும் ஒன்றாகும். 1979ம் ஆண்டு தோற்றம் பெற்ற இந்த மாவட்டம் கிளிநொச்சி, மன்னார். திருகோணமலை, மற்றும் மன்னார் மாவட்டங்களாலும் ஒலுபுறத்தில் கடலாலும் சூழப்பட்ட பிரதேசமாகும். இது வடமாகாணத்தின் கிழக்குப்பக்கமாக பெருநிலப்பரப்பையும் கொண்டமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கெல்லையாக கிளிநொச்சி மாவட்டமும்,கிழக்கெல்லையாக கடற்பரப்பும், தெற்கு எல்லையாக திருகோணமலை மாவட்டமும், வவுனியா மாவட்டமும், மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதியும் மேற்கெல்லையாக மன்னார் மாவட்டமும் அமைந்துள்ளன. அதன் நிலப்பரப்பானது வனப்பகுதிகளை உள்ளடக்கியும் ஆனால் மாவட்டத்தின் உட்புறமாகப் பரந்துபட்ட கடற்பகுதி நீங்கலாகவும் அண்ணளவாக 2516.9 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்டதாகும். இது நாட்டின் மொத்தப் பரப்பளவின் 3.8% விழுக்காட்டினைக் கொண்டதாகும்.காலநிலை மற்றும் பௌதீகத் தன்மைகளும் காலநிலைஉலர்வலயம் - பருவகால மழைவீழ்ச்சி முறைமைவருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1300 - 2416வெப்பநிலை 23.00oC - 39.30oC ஆகும்.பௌதீகத் தன்மை முல்லைத்தீவு மாவட்டம் பொதுவாக தட்டையான நிலப்பரப்பினைக் கொண்டதாகும். நிலமானது பொதுவாக கிழக்கு வடக்காக சீராக சரிந்து செல்வதோடு மேற்குப்பகுதி மேற்கு மற்றும் தெற்காக நாய்ந்தும் செல்கின்றது. இந்த மாவட்டமானது 70கிலோமீற்றர் நீளமான கடற்கரையினை கொண்டுள்ளதோடு இறால் உற்பத்தியாகும் கொக்கிளாய், நாயாறு, ந்ந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல்நீரேரிகளையும் தன்னகத்தே கொண்டதாகும். இதன் நில உயரமானது கடல்மட்டத்திலிருந்து 36.5 மீற்றர் வரை வேறுபட்டுக்காணப்படுகின்றது. மண்ணின் தன்மையானது விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகாளாக அமைந்துள்ளது.
| Name | From | To |
| A.சோதிநாதன் | 2004 | 2007 |
| ஆரணி தவபாலன் | 2007 | 2011 |
| C.தயானந்த | 2011 | 2012 |
| T. திரேஸ்குமார் | 2012 | 2012 |
| P.குகநாதன் | 2012 | 2013 |
| R.குருபரன் | 2013 | 2014 |
| T.திரேஸ்குமார் | 2014 | 2016 |
| S.குணபாலன் | 2016 | 2018 |
| I.பிரதாபன்(ADS) | 2018 | 2018 |
| M.உமாமகள் | 2019 | வரை |














